கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை! மருத்துவக் குழு தீவிரமாக கண்காணிப்பு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர். நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நல்லகண்ணு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது வயது மற்றும் உடல்நிலை காரணமாக, அவருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையைத் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.