கோழியின் கணையத்தில் உள்ள 'பிலிவர்டின்' நிறமியால் அரிய நிகழ்வு - கால்நடை மருத்துவர் விளக்கம்!
கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டத்தில் ஒரு நாட்டுக்கோழி நீல நிறத்தில் முட்டை இட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான இந்தக் கோழி, வழக்கத்திற்கு மாறாக நீல நிறத்தில் முட்டை இட்டதால், பொதுமக்கள் அதை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
இந்த அரிய நிகழ்வு குறித்துக் கால்நடைத்துறை உதவி இயக்குநர் டாக்டர் அசோக், "கோழியின் கணையத்தில் உள்ள 'பிலிவர்டின்' (biliverdin) என்ற நிறமி காரணமாக முட்டை நீல நிறமாக மாறியிருக்கலாம். இது ஓர் அரிய நிகழ்வு" என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், இந்த அரிய நிகழ்வுக்கான காரணம் குறித்து விரிவாக ஆராய்வதற்காக, நீல நிற முட்டை இட்ட அந்தக் கோழியை ஆய்வுக்காக எடுத்துச்செல்ல கால்நடைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.