நடிகர் அஜித்துடன் இணையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்? -கூலி பட கொண்டாட்டதில் வெளியான அப்டேட்!

நடிகர் அஜித்துடன் இணையும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்? -கூலி படக் கொண்டாட்டதில் வெளியான அப்டேட்!



வாய்ப்பு கிடைத்தால் நடிகர் அஜித்குமாருடன் நிச்சயம் இணைந்து படம் எடுப்பேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் இன்று காலை முதல் திரையிடப்பட்டு, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், பகத் பாசில், சௌபின் ஷாஹிர், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா போன்றோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் (LCU) உடன் இணையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே வலுவாக நிலவி வருகிறது. இந்த விவாதம் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துக்கொண்டிருக்கும் வேளையில், ரசிகர்கள் இன்று காலை முதலே திரையரங்குகள் முன்பு குவிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில், ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகமாக மேளதாளங்களுடன், பட்டாசு வெடித்து, கட் அவுட்டுகளுக்கு மாலை அணிவித்து, பாலபிஷேகம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு, படத்தின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தனர்.

ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பதற்காக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் வெற்றி திரையரங்குக்கு வருகை தந்தனர். அவர்களை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று, உற்சாகமாகத் திரையரங்கிற்குள் அழைத்துச் சென்றனர்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்த லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "படம் மிகவும் நன்றாக உள்ளது. ரசிகர்கள் உற்சாகமாகப் படம் பார்த்து வருகின்றனர். படம்குறித்து விரிவாகப் பின்னர் ஒரு நாள் பேசுகிறேன்" என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோருடன் இணைந்து படம் இயக்கிவிட்டீர்கள், அடுத்து நடிகர் அஜித்துடன் எப்போது இணைவீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "வாய்ப்பு கிடைத்தால் நடிகர் அஜித்குமார் உடன் நிச்சயம் இணைந்து படம் எடுப்பேன்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில், "தலைவர் ரஜினிகாந்த் திரை உலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுற்றதை ஒட்டி இந்தப் படம் வெளியாகி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்க்கும்போது, இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. தலைவர் படத்திற்கு எப்போதும் ஆடிக்கொண்டே இருப்பேன்" என்று கூறிவிட்டுச் சென்றார்.
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!