வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவலுப்பெற வாய்ப்பு!
ஆந்திரா-ஒடிசா இடையே கரையை கடக்கும் என்றும், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் கடற்கரையையொட்டி, வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்தக் காற்றழுத்தத தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகஸ்ட் 19-ஆம் தேதி அதிகாலை தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேசப் பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, தமிழகத்தில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.