Saroja Devi Death: கன்னடத்து பைங்கிளி நடிகை சரோஜாதேவி மரணம் – திரைத்துறையில் சோகம்! Kannada film actress Saroja Devi passes away – tragedy in the film industry!

கன்னடத்து பைங்கிளி நடிகை சரோஜாதேவி மரணம் – திரைத்துறையில் சோகம்!

இந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, வயதுமூப்பு காரணமாகப் பெங்களூருவில் உள்ள தனது வீட்டில் இன்று (ஜூலை 14) தனது 87-வது வயதில் காலமானார்.

கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என்று தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் சரோஜா தேவி. இவர் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம்வந்த நடிகை சரோஜா தேவி கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் கன்னடம் மட்டுமில்லாது தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியென அனைத்து மொழி படங்களிலும் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தவர். 

1955 ஆம் ஆண்டு ‘மகாகவி காளிதாசா’ என்ற கன்னட திரைப்படம்மூலம் அறிமுகமானவர் சரோஜா தேவி. அதைத் தொடர்ந்து, தமிழில் 1958ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் படத்தில் அறிமுகமாகி பிரபலமடைந்தார். இதையடுத்து, இயக்குநர் ஸ்ரீதரனின் ‘கல்யாண பரிசு’ படத்தில் 1959 ஆம் ஆண்டில் நடித்து வரவேற்பை பெற்றார்

சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். நெஞ்சில் நின்ற நினைவுகள், ‘அன்பே வா’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘எங்க வீட்டு பிள்ளை’, ‘பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். நடிகை சரோஜா தேவி தமிழ், கன்னடம், உள்ளிட்ட பல மொழி படங்களில் ஒரே நேரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவரது கலை சேவையைப் பாராடி இந்திய அரசு சரோஜா தேவிக்கு, 1969 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 1992 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும் வழங்கிக் கவுரவித்தது. மேலும் இவருக்குத் தமிழக அரசின் சார்பில் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  பல மாநில அரசுகளின் விருதுகளையும், வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் பெற்றுள்ளார்.

நடிகை சரோஜா தேவி தமிழில் கடைசியாக நடிகர் சூர்யாவின் நடிப்பில்  கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘ஆதவன்’ திரைப்படத்தில், சூர்யாவுக்கு பாட்டியாக நடித்திருந்தார். அதன்பிறகு, வயது மூப்பு காரணமாகத் திரையுலகில் தொடர்ந்து நடிப்பதை தவிர்த்தார். 

இந்த நிலையில் அவர், வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறை காகாரணமாகப் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் இவரது மறைவிக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவு, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு பெரிய இழப்பாகும். திரைத்துறையினரும், ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் அவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் பெங்களூரிலேயே பொதுமக்களுக்கு அஞ்சலிக்காக வைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com