திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்குக் குற்றவாளியை 14 நாட்களுக்குப் பின் போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, 10 வயது சிறுமி கடந்த, 12ம் தேதி, மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். போலீசாரின் விசாரணையின்போது சிறுமியை இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து சென்று கடத்திச்செல்லும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில், 14 நாட்களாகப் போலீசார் தேடி வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்துத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றவாளியைப் பிடிக்கப் போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். பின்னர் எந்தத் தகவலும் கிடைக்காததையடுத்து, இவ்வழக்கு விசாரணைக்கு உதவியாக, மர்ம நபரை அடையாளம் காணவும், துப்பு துலக்கவும் பயனுள்ள குறிப்பிடத் தக்க மற்றும் நம்பகமான தகவல்கள் தருவோருக்கு, 5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் எனப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளியைப் பிடிக்க 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 700க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில் 400க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், 14 நாட்களாகப் போலீசார் தேடி வந்த நிலையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் கைது செய்தனர்.
குற்றவாளியை அடையாளம் காண உதவுபவர்களுக்கு ₹5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் எனப் போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ரயில் நிலையங்களில் தீவிர தேடுதல் நடத்தப்பட்டது. குற்றவாளி ரயிலில் பயணிக்கும் ஒரு சிசிடிவி புகைப்படம் வெளியான நிலையில், அந்த ரயில் சென்ற பகுதிகளில் போலீசார் தங்கள் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில், ஆரம்பக்கம் ரயில் அதே உடையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரைக் காவல்துறையினர் அடையாளம் கண்டு கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, பிடிபட்ட நபரின் புகைப்படத்தைப் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காட்டியபோது, தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர் இவர்தான் என சிறுமி அடையாளம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.