திமுக கூட்டணி உறுதியாக கம்பீரமாக உள்ளது - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ! DMK alliance is firmly and majestic MDMK General Secretary Vaiko





திமுக கூட்டணி உறுதியாக கம்பீரமாக உள்ளது - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 

மக்கள் நலக்கூட்டணி போல் தற்போது கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை. திமுக தலைமையிலான உறுதியாக கம்பீரமாக இருக்கிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.


மதிமுக பொது செயலாளர் வைகோ நாடாளுமன்றத்தில் பதவி காலம் முடிந்ததால் இறுதி நாள் பிரியா விடை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் டெல்லியில் இருந்து விமானம் முலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் வைகோவிற்கு மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மதிமுக தனது கட்டமைப்பை வலுப்படுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழகத்தில் 7 மண்டலமாக பிரித்து உள்ளது. 8 அல்லது 9 மாவட்டங்கள் ஒவ்வொரு மண்டலமாக இருக்கும். 7 மண்டலமாக கட்சி முண்ணனி தலைவர்களுடன் சென்று பார்த்த போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள்
வந்திருந்ததை கண்டு பிரமிப்பு ஊட்டியது. திருச்சியில் அண்ணா பிறந்த நாளை பிரமாண்டமாக நடந்த மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்து உள்ளார். திருச்சி மாநாட்டிற்கு அதிக அளவில் வருவதாக கூறினார். 1994ல் எழுச்சி பேரணி கூட்டத்தை சென்னை சந்தித்தது இல்லை. துயரத்திற்கு துயரமாக மாவட்ட செயலாளர் ஏழுமலை வெட்டி கொலை செய்யப்பட்டார். எனக்கு அரணாக இருந்த கே.பி.கே மறைந்த போதும் குடியரசு மறைந்த போதும் வேதனைக்கு ஆளானேன். 1995ம் ஆண்டு திருச்சியில் மாநில முதல் மாநாட்டை நடத்தினேன். அதே போல் மாநாட்டை நடத்த உள்ளோம். 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாஜ்பாய், அத்வானி, இந்திய தலைவர்கள் கலந்து கொண்டனர். வைகோ கோரிக்கை ஏற்று சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றும் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் பிரகடனம் செய்தார். நள்ளிரவு 1 மணிக்கு பிரதமர் வாஜ்பாய் பேசினார். அமெரிக்காவில் இருந்து மூப்பனார் இரவு 10-க்குள் பிரதமர் பேசி முடித்து விடுவார். நள்ளிரவு 1 மணிக்கு பேசியதால் வாஜ்பாய்க்கு என்ன சொக்கு பொடி போட்டாய் என கேட்டார். 

முதலமைச்சராக இருந்த கலைஞர் வாஜ்பாயை வழியனுப்ப வந்தார். அப்போது 5 ஆண்டுகள் கழித்து என்னை பார்த்து கலைஞர் அழைத்து என் கரத்தை பற்றி கொண்டார்.

அப்போது பிரதமர் வாஜ்பாய் கலைஞரிடம் சிறந்த நேர்மையான நண்பரை 5 ஆண்டுகளுக்கு முன் இழந்து விட்டீர்கள். இப்போது வந்து உள்ளார் என்னையும் உங்களையும் காண என்றார். 

பிரதமர் சென்ற பின் முதலமைச்சர் கலைஞர் செய்தியாளர்களிடம் இது எம் டி எம் கே என்றார். 

94ம் ஆண்டு முதல் அண்ணாவிற்கு மாவட்ட மாநாடு நடத்தி வருகிறோம். பெரிய இடைவெளிக்கு பிறகு இந்தாண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்த உள்ளோம். இந்துத்துவ சக்திகள், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க வட்டாரங்கள் தமிழகத்தை கபளிகரம் செய்து விடலாம் என்று கருதி கொண்டு காலுன்ற முயற்சிக்கிறார்கள். இது நடக்காது. பெரியாரின் பூமி. அண்ணாவின் மண். திராவிட இயக்க பூமி கால் வைக்க முடியாது. அவர்கள் எத்தகை முயற்சி செய்தாலும் எத்தனை கோடிகளை யாருக்கு வாரி இறைந்தாலும் மனக்கோட்டை மண் கோட்டையாக தகர்த்து தவிடு பொடியாகும். 2026ம் ஆண்டு திமுக தலைமையிலான இந்த கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். திமுக தனி மெஜாரிட்டி கிடைக்கும். கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றாலும் கூட்டணி அரசு அமைய வாய்ப்பே இல்லை. திமுக தனியாக அரசு அமைக்கும். 

நாடாளுமன்றத்திற்கு குட் பை சொல்லி விட்டு வந்துவிட்டேன். நாடாளுமன்றத்தில் எனது கடமையை செய்து உள்ளேன். அங்குள்ள அனைத்து கட்சியினரும் என்னை நேசிக்க கூடியவர்கள். என்னுடைய உரைக்கு பின் ஒவ்வொருவராக வந்து வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர். மீண்டும் இந்த அவைக்கு வர வேண்டும் என்று தலைவர்கள் பேசினார்கள். யாருக்கும் எந்த பதிலும் சொல்லவில்லை. மீண்டும் 2 தினங்களில் முக்கியமான பிரச்சனைகளில் தமிழ்நாட்டை பாதுகாத்தோம். உரிமைகளை பாதுகாத்தோம். எப்படி விரட்டி அடித்தோம். இப்போது மீண்டும் திறக்க வேண்டும் சிலரை ஆர்ப்பாட்டம் செய்ய வைக்கிறது நாசக்கார ஸ்டெர்லைட் நிறுவனம். ஸ்டெர்லைட் என்ற பெயரில் தூத்துக்குடியில் பொது கூட்டம். முல்லை-பெரியாறுக்காக கம்பத்தில் ஒரு கூட்டம். இந்தி ஆதிக்கத்தை எதிர்க்க திருப்பூரில் கூட்டம், காவிரி குறித்து குடந்தை, திண்டுகல்லில் கூட்டம், சென்னையில் 2 இடங்கள் என முடிவு செய்து உள்ளோம். 7 நாளில் 7 பிரமாண்டமான கூட்டங்களில் நான் கலந்து கொள்ள உள்ளேன். 

தனி சின்னம் குறித்து தேர்தல் வரும் பேச வேண்டிய கருத்து. இப்பொழுது எதுவும் சொல்ல முடியாது. 

எடப்பாடி பழனிசாமியை விட பெரிய கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் செல்கிற எல்லா இடங்களில் வருகிறார்கள். திராவிடத்தை தமிழக மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு சாட்சி.

மக்கள் நலக்கூட்டணி போல் தற்போது கூட்டணி அமைய வாய்ப்பு இல்லை. திமுக தலைமையிலான உறுதியாக கம்பீரமாக இருக்கிறது. இந்த கூட்டணியில் சலனத்திற்கும், சஞ்சலத்திற்கும் கூட்டணி தலைவர்கள் மத்தியில் துளியளவு எண்ணம் கூட கிடையாது. இவ்வாறு அவர்கூறினார்.
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com