கோவை குண்டுவெடிப்பு வழக்கு.. 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா கைது! Coimbatore blast case Taylor Raja who had been absconding for 27 years arrested

கோவை குண்டுவெடிப்பு வழக்கு..  27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா கைது!





கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா சத்தீஸ்கரில் தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த பா.ஜ.க தலைவர் அத்வானியை கொலை செய்யும் முயற்சியாக அல்உம்மா பயங்கரவாத அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி தாக்குதல் நடத்தினர். இதில் 58 பேர் உயிரிழந்த நிலையில், 150 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததனர். 

28 ஆண்டுகள் தலைமறைவு

தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அல் உம்மா பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான டைலர் ராஜா என்பவர் தலைமறைவானார். தொடர்ந்து போலீசார் அவ்ரை தேடி வந்த நிலையில், கடந்த 28 ஆண்டுகளாக பதுங்கி இருந்த சாதிக் ராஜா (எ) டைலர் ராஜாவை சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். பலத்த பாதுகாப்புடன் அவரை கோவைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் காவலர்கள் பணியில் இருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 ஆல்-உம்மா அமைப்பின் உறுப்பினர் 

கோவை உக்கடம் பிலால் எஸ்டேட்டைச் சேர்ந்த ராஜா, ஆல்-உம்மா அமைப்பின் தீவிர உறுப்பினராக இருந்தவர். 1998-ஆம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய பங்கு வகித்த இவர், அதற்கு முன்பு தையல்காரராகவும், எம்பிராய்டரி வேலை செய்பவராகவும் பணியாற்றி வந்தார். கர்நாடகத்தில் இவரது நடமாட்டம் குறித்து கோவை காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், புதன்கிழமை அவர் சட்டீஸ்கரில் வைத்து கைது செய்யப்பட்டார்.

1996-ஆம் ஆண்டு நாகூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட, கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய மற்றும் மதுரை கரிமேடு காவல் நிலையத்தில் 1996-97 காலகட்டத்தில் மேலும் இரண்டு கொலை வழக்குகளில் ராஜா தொடர்புடையவர். 1998-ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு தொடர்பாக, வள்ளல் நகரில் வாடகை வீடு எடுத்து, அங்கு குண்டுகள் தயாரிக்கப்பட்டு சேமிக்கப்பட்டதாகவும், பிப்ரவரி 12 முதல் 14 வரை ஆல்-உம்மா அமைப்பின் தொண்டர்களுக்கு குண்டுகளை விநியோகித்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதே வழக்கில் மற்றொரு முக்கிய குற்றவாளியான ஒப்பணக்கார தெருவைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான், 1998 பிப்ரவரி முதல் தலைமறைவாக உள்ளார். ஆறாம் வகுப்பு வரை படித்த முஜிபுர் ரஹ்மான், ஆல்-உம்மாவின் மாநில செய்தித் தொடர்பாளராக இருந்தவர். கோவையில் அமைப்பின் தொண்டர்களைத் திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்த இவர், குண்டுகளை வைப்பதற்கு தள்ளுவண்டிகளை ஏற்பாடு செய்ததாகவும், 1998 பிப்ரவரி 14 அன்று ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் நடந்த பாஜக கூட்டத்தில் தற்கொலைப் படை உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தபோது அங்கு இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்து உள்ளது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஒருவர் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டு இருப்பது, இவ்வழக்கில் மேலும் பல  தகவல்கள் வெளியாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

 சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில்  விசாரணை

கைது செய்யப்பட்ட டெய்லர் ராஜாவிடம் தற்பொழுது கோவை, அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வளாகத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கோவை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் காவலர்கள் பணியில் இருக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com