மதுரை ஆதீனம் மீது வழக்கு: கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் புகார்!
சென்னை: மதுரை ஆதீனம் மீது கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அயனாவரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் கலந்து கொண்டு பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது உதவியாளரும் இதேபோன்ற கருத்துகளை தெரிவித்திருந்தார்.
"குல்லா அணிந்த நபர்கள் தங்களைத் தாக்கி கொலை செய்ய முற்பட்டனர்" என்று மதுரை ஆதீனத்தின் உதவியாளர் கூறியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு, தமிழ்நாட்டின் ஆன்மிக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.