பெரியகுளம் அருகே பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டிய மூவர் கைது | Three arrested for threatening woman by obscenely filming

பெரியகுளம்: பெரியகுளம் அருகே வீட்டில் பெண் உடை மாற்றும்போது அலைபேசியில் ஆபாசமாக படம்பிடித்து மிரட்டிய பெண் உள்ளிட்ட மூவரை போலீஸார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எ.வாடிப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பால்சாமி. இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தனலட்சுமி(30). அதே பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் தூண்டுதலின் பேரில் வீட்டில் ராஜலட்சுமி உடைமாற்றியபோது தனலட்சுமி ஆபாசமாக புகைப்படம் எடுத்துவந்துள்ளார்.

இந்த புகைப்படங்களை ஆனந்தராஜின் தம்பி சின்னச்சாமி (28) பார்த்துள்ளார். இதை ராஜலட்சுமியிடம் காட்டி தன்னுடன் உறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸில் ராஜலட்சுமி புகார் அளித்தார். இதில், தன்னை ஆபாசமாக படம் எடுக்க தூண்டிய ஆனந்தராஜ், படம் எடுத்த தனலட்சுமி, படத்தை காட்டி மிரட்டிய சின்னச்சாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸார் மூவரையும் கைது செய்தனர்.

Source link

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?