*குளிர்காலம் துவங்கியதால் மேற்குத் தொடர்ச்சி மலையில் கொட்டும் பனி : கோவையில் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு போர்வைகள் - நன்னயம் செய் அறக்கட்டளையினர் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !!!*
நன்னையம் செய் அறக்கட்டளையின் சார்பில் கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள மெல்மருந்தங்கரை மற்றும் கீழ்மருந்தங்கரை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு போர்வைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த மனிதநேய சேவை நிகழ்ச்சியை நன்னையம் செய் அறக்கட்டளை தலைவர் அருண் கார்த்திக், செயலாளர் கணேஷ் மற்றும் பொருளாளர் கல்பனா ஆகியோர் செய்து இருந்தனர். இந்த மலை கிராம மக்களுக்கு குளிர் தாங்க உதவும் போர்வைகள் வழங்கப்பட்டது. இதைப் பெற்றுக் கொண்ட கிராம மக்கள் நன்னயம் செய்து அறக்கட்டளை நிர்வாகிகளை பாராட்டினர்.
தொடர்ந்து ஏழை - எளிய மக்களின் நலனுக்காக நன்னயம் செய்ய அறக்கட்டளை பல்வேறு சேவை தொடர்ந்து செய்து கொண்டு உள்ளனர். மேலும் இந்த சேவைகள் தொடரும் என அதன் நிர்வாகிகள் கூறினர்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மலை கிராம மக்கள் கலந்து கொண்டனர்.