உடுமலை அரசுகல்லுாரியில் 578 பேர் சேர்க்கை பதிவு.!

உடுமலை:

உடுமலை அரசு கலைக்கல்லுாரி இளநிலை முதலாமாண்டுக்கான முதற்கட்ட கலந்தாய்வில், 578பேர் சேர்க்கை பதிவு செய்துள்ளனர்.

இக்கல்லுாரியில் இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, கடந்த மாதம் 31ம் தேதி துவங்கியது.

கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுக ளான கலந்தாய்வில் மொத்தமாக, 420 இடங் களில் 331இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
தொடர்ந்து அறிவியல் பாடப்பிரிவுக ளான பாடங்களுக்கும், மொழி பாடங்களுக்கான கலந்தாய்வும் நடந்தது. நேற்றுடன் முதற்கட்ட பொது கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது.
மொத்தமாக முதற்கட்ட கலந்தாய்வில், 578இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு, வரும் 12ம்தேதி நடக்கிறது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk