வருமான வரி சோதனையில் செந்தில் பாலாஜி வீட்டில் 150 கிலோ தங்கம் பிடிபட்டதா? - எச்.ராஜா

IT raid செந்தில் பாலாஜி:

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 22 பேர் உயிரிழந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக சொல்லாதவர்கள்,  எதிர்பாராமல் நடந்த ரயில் விபத்துக்காக பிரதமரை மட்டும் பதவி விலக சொல்வது ஏன் ? என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை

பாரதிய ஜனதா கட்சியின் 9வது ஆண்டு சாதனைகள் குறித்து பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா திருச்சியில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆர்டிக்கல் 370 அத்துடன் 35Aவை ரத்து செய்தது. ராமர் கோவில் பிரச்சினையை மிக சுலபமாக தீர்த்தது,  இந்தியாவிலேயே ஒரு மிக பெரிய சிக்கலான விஷயத்தை சரி செய்தது பா.ஜ.க. என கூறினார். அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ன செய்யப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மிக சுலபாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக தெரிவித்தார். மேலும்  அனைவருக்கும் வீடு திட்டத்தில் 3 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுத்துளளோம்,  11 கோடி 72 லட்சம் மக்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளதாக தெரிவித்தவர், பாஜக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

 

பிரதமரை பதவி விலக சொல்வது ஏன்.?

இதனை தொடர்ந்து ஒடிசா கோர ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகளை வைக்கும் கோரிக்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், தமிழகத்தில் கள்ளச்சாராய மரணத்தால் 24 பேர் இறந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜி அல்லது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ராஜினாமா செய்தார்களா? என கேள்வி எழுப்பினார். ஆனால் இந்த ரயில் விபத்தில் மட்டும் பிரதமர் பதவி விலக வேண்டும் என கூறுவது ஏன் ? என விமர்சித்தார்.  ஒடிசா ரயில் விபத்திற்கு என்ன காரணத்தை கண்டிப்பாக நாம் கண்டு பிடிப்போம்  பிரதமர் நரேந்திர மோடி இதற்காகத்தான் உடனடியாக சி பி ஐ  விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்..

செந்தில் பாலாஜி வீட்டில் 150 கிலோ தங்கம்

தமிழகத்தில் செந்தில் பாலாஜியை பற்றி பேச எந்த அமைச்சருக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லையென கூறியவர், திருச்சியில் கே.என் நேருவிடம் கேள்வி கேட்டால் என்ன சொல்கிறார் ? செந்தில் பாலாஜி வீடு ரெய்டு தொடர்பாக கேள்வி கேட்டால், சாக்கடை அடைத்தால் சொல்லு பதில் சொல்கிறேன் என்கிறார். அரசு மது பான கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவது ரெய்டுக்கு  முன்னாடியே.?  பின்னாடியே …? இவை அனைத்தும் முன் கூட்டியே நடந்து வந்தது. செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனையின் போது  150 கிலோ தங்கம் பிடிப்பட்டதாக கூறுகிறார்கள் என தெரிவித்தவர்,நாடாளுமன்ற தேர்தலில் எதிர் கட்சிகள் ஒன்று சேர வாய்ப்பு இல்லையென கூறினார்.

 

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?