திருப்பூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் உடுமலை எரிசினம்பட்டி உதவிமின் பொறியாளர் அலுவலத்தை இடம்மாற்றக்கூடாது, மின்கட்டணத்தை நேரடியாக பெற மறுக்கக்கூடாது, மக்களை அலையவிடக்கூடாது ஆன்லைனில் கட்டவும் கூகுள்பேயில் கட்டவும்சொல்லி சிபாரிசு செய்யக்கூடாது என மனுகொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
எரிசினம்பட்டி உதவிமின் பொறியாளர் சுந்தரவேல் அவர்களிடம் மனுகொடுத்துப் பேசப்பட்டது. இதில் CPIM உடுமலைஒன்றியச்செயலாளர் கி. கனகராஜ், கமிட்டிஉறுப்பினர்கள் A. ராஜகோபால்,. S. ஜெகதீசன், சு. தமிழ்த்தென்றல் M. ரங்கராஜ், S. சித்ரா, மகேஸ்வரி மற்றும் கிளைச்செயலாளர்கள் செல்லப்பம்பாளொயம் பிரபுராம், எரிசினம்பட்டி மணிக்குமார், JNபாளையம் காமராஜ், சாலையூர் காளிமுத்து, தேவனூர்புதூர் ஆறுச்சாமி, வல்லக்குண்டாபுரம் வேலுச்சாமி குரல்குட்டைமகேந்திரரன் உட்பட ஏராளமானோர் மனுகொடுக்கும் இயக்கத்தில் பங்கேற்றனர்.