தமிழகத்தில் மருத்து கடையில் அனுமதியில்லாமல் மனநோய் மற்றும் தூக்க மாத்திரைகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விற்றால் கடைக்கு சீல் வைப்பதோடு உரிமமும் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மன நோய் மற்றும் தூக்க மருந்துகளை மக்கள் தவறாக பயன்படுத்தாகவும், அதை தடுக்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது. இது குறித்து பல்வேறு மருந்துக்கடைகளில் ரெய்டு நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளது.