மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.!

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்.

இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர், சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 214 மனுக்கள் வரப்பெற்றன.

அதே போன்று மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 13 மனுக்கள் பெறப்பட்டன. தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளி ஒருவருக்கு தையல் எந்திரத்தை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா வழங்கினார்.

கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் மயில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post

Post Ads 1

 

Post Ads 2

 
 

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!