கள்ளக்குறிச்சி:
கண்ணும் மண்ணுத் தெரியாம கலக்கும் கலைஞன்..! கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டி தன் கண்களில், மண்ணை கொட்டிக் கொண்டு
தமிழக அரசே பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்
என்ற வாசகத்தை எழுதினார்.
சுமார் 12000 பகுதிநேர ஆசிரியர்கள், 11 ஆண்டு காலமாக பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறோம். குறைந்த நேரம், குறைந்த ஊதியம் இதனால் எங்களின் குடும்பம் வறுமையில் கடன் வாங்கி வாழ்க்கை நடக்கிறது. வறுமையாலும், நோய் வாய்ப்பட்டு மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமலும் சில பகுதிநேர ஆசிரியர்கள் இறந்து விட்டார்கள். எனவே தமிழக அரசு காலம் தாமதம் செய்யாமல் பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் வகையில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் தன் கண்களின் மேல் மண்ணை கொட்டிக் கொண்டு
“தமிழக அரசே, பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்” என்ற வாசகத்தை எழுதினார்.
https://www.youtube.com/shorts/qTXv4zGeVqI
கண்களில் மண்ணை கொட்டிக்கொண்டு எழுதும் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களைப் பார்த்து பொதுமக்கள் மற்ற பகுதிநேர ஆசிரியர்கள் “நெகிழ்ந்து” வாழ்த்துக்கள் கூறினார்கள்.
-சு.செல்வம், பகுதிநேர ஓவிய ஆசிரியர்.