அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலங்கள் – வக்பு சொத்துக்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்
இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது .
தமிழகம் முழுவதும் ஆண்டாண்டு காலமாக சொந்தமாக வீடு இல்லாமல் ஏழை மக்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர் . மேலும் வீட்டின் உரிமையாளர்கள் ஒவ்வொரு ஆண்டுக்கும் வாடகை பணம் ஏற்றி வசூல் செய்து வருகின்றனர். இதனால் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டு வாடகை பணம் கொடுக்க முடியாமல் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் பாதிக்க பட்டு வருகின்றனர் .
தமிழகத்தில் நல்லாட்சி செய்து வரும் மாண்புமிகு முதல்வர் மு க . ஸ்டாலின் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்தி சொந்தமாக நிலங்கள் இல்லாத எழை மக்களுக்கு இலவச வீட்டு மணை பட்டா வழங்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
தமிழகம் முழுவதும் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலங்கள் – வக்பு சொத்துக்கள் ஆக்கிரமைப்பு செய்ய பட்டு இருக்கின்றன ? இதனை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து அரசுக்கு சொந்தமான நிலங்கள் – வக்பு சொத்துக்களையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது .
எனவே : தமிழக முழுவதும் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலங்கள் – வக்பு சொத்துக்களையும் சட்ட விரோதமாக ஆக்கிரமைப்பு செய்து வைத்து இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்த வித பாரபட்சம் பார்க்காமல் சட்ட ரீதியாக தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
-காயல் அப்பாஸ்