சென்னை:
சென்னை G1 வேப்பேரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது அங்காளம்மன் கோயில் தெரு. இத்தெருவில் அமைந்துள்ள டிபன் கடையில் நேற்று (7.6.2022) மதியம் ஒரு வாலிபர் போதையில் சாப்பாடு மற்றும் அங்கு வைக்கப்பட்ட இருந்த போண்டாவை கையில் எடுத்துக் கொண்டு
காசு கொடுக்காமல் மிரட்டினார். எங்களிடமே காசு கேட்கிறாயா? என்று கடையில் வேலை செய்யும் தொழிலாளர்களை அடித்துள்ளார். அப்போது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க கடையில் வேலை செய்த நபர் கைபேசியில் பேசிய போது என்னை ஒன்றும் ஆட்ட முடியாது? என்று ஜட்டியை கழட்டி காட்டும் அளவிற்கு இவர்களுக்கு தைரியம் உள்ளது. இவன் செய்த அராஜகத்தால் கடையில் பணிபுரியும் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்ய வேண்டுமா? என்று அச்சத்தில் உள்ளனர்.
சென்னை மாநகர காவல் துறை இவர்களை போன்று அராஜகத்தில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாழ் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பின்பு அரஜாகத்தில் ஈடுப்பட்ட நபரை தீவிர விசாரத்ததில்அவனுடைய பெயர் விஜய் என்றும் கே.எம். கார்டன் பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அவர் செய்த அனைத்து அராஜகமும் இரண்டு வீடியோவில் பதிவாகி உள்ளது.