திருப்பூர்:
17 வயது பள்ளி மாணவியிடம் பழகி, பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய மைக் செட் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 8வது வார்டு கொழிஞ்சிவாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். கூலி தொழிலாளியான அவரது மகன் மணிகண்டன் என்கிற சஞ்சய் (21) தாராபுரம் பகுதியில் மைக்செட் கடையில் பணியாற்றி வருகிறார்.
அதே பகுதியைசேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளிக்கு செல்லும்போது மணிகண்டன் அந்த மாணவியிடம் பழகி வந்துள்ளார். அதன்பின், மாலை நேரங்களில் பெற்றோர் இல்லாத சமயம் அவரது வீட்டிற்கு சென்று பல முறை அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துஅதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி கேட்ட போது வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்றும், கொலை செய்து விடுவேன் என்றும் கூறி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன மாணவி, இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெறற்ஓர் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மணிகண்டனை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மணிகண்டன் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவரை தாராபுரம் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-Prabhanjani Saravanan