சென்னை:
தொடர்ந்து ஆன்லைன் ரம்மியால் பலர் பணம் இழப்பதும், தற்கொலை செய்துகொள்வதும் தொடர்கதையாகி வருகிறது. பலரும் ஆன்லைன் ரம்மியை தடை செய்யவேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அவசர சட்டத்தை உருவாக்க சிறப்பு குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஒய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
– Prabhanjani Saravanan