தேனி மாவட்டம் பங்களாமேட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் தேனி எம்பி-யுமான ரவீந்திரநாத், உள்ளிட்ட முக்கிய அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தமிழக அரசின் 144 தடை உத்தரவு அமுலில் இருக்கும்போது எவ்வித அனுமதி இன்றி சட்டவிரோதமாக நடைபெற்றதாக புகார் எழுந்தது. தேனி அல்லிநகரம் கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஐபிசி 143,283,341 மற்றும் 269 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் தேனி நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஓ.பன்னீர் செல்வம் அவரது மகன் உள்பட மொத்தம் 10 அதிமுக நிர்வாகிகள் மீது இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-Pradeep