சேலம்: சேலம் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட குகை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட கோலப் போட்டியில் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மாவட்டத் தலைவர் தமிழன் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், 45 மற்றும் 46-வது வார்டுகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இன்றைய தலைமுறைக்கு நம் நாட்டின் பாரம்பரியக் கலைகளின் முக்கியத்துவத்தையும், கோலத்தின் அழகியலில் பொதிந்துள்ள பண்பாட்டு அர்த்தங்களையும் எடுத்துச் சொல்வதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
போட்டியில் பங்கேற்ற அனைத்துப் பெண்மணிகளுக்கும் மற்றும் சிறுமிகளுக்கும் ஊக்கப்படுத்தும் விதமாகப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய நிர்வாகிகள், "புதுமையை அணைக்கட்டும்… பழமையை என்றும் பாதுகாக்கட்டும்…" என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் தாரக மந்திரம் என்று குறிப்பிட்டு, நமது கலைகளை அழியாமல் காப்பதே கட்சியின் லட்சியம் எனத் தெரிவித்தனர்.