கோவையில் வாலிபரின் வீட்டைச் சுற்றி ஆயுதங்களுடன் நின்றார் கும்பல் : போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட்டம் - இருவரை மடக்கிப் பிடித்த காவல்துறை சிறையில் அடைப்பு!!!

கோவையில் வாலிபரின் வீட்டைச் சுற்றி ஆயுதங்களுடன் நின்றார் கும்பல் : போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட்டம் - இருவரை மடக்கிப் பிடித்த காவல்துறை சிறையில் அடைப்பு !!!

கோவை, கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் என்ற குருவி சரவணன். சம்பவத்தன்று இவர் வெளியில் சென்று இருந்தார். அப்போது 3 பேர் அவரது வீட்டை சுற்றி சுற்றி வந்து நோட்டம் விட்டு உள்ளனர். அவர்கள் கையில் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்து உள்ளது. இதை வீட்டிற்குள் இருந்து அவரது மனைவி பார்த்து உள்ளார். 

உடனே இதுகுறித்து சரவணனுக்கு தகவல் தெரிவித்து உள்ளார் . இதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சரவணன் இருக்கும் பகுதிக்கு வந்து அவர்களுக்கு தெரியாமல் நோட்டம் பார்த்தார். 

பயங்கர ஆயுதங்களுடன் நிற்பதை பார்த்ததும் ஏதோ ? திட்டத்துடன் அவர்கள் வந்து இருப்பதாக சந்தேகம் அடைந்த அவர் பெட்ரோல் போலீசாருக்கு செல்போனில் தகவல் கொடுத்தார்.

உடனே பெட்ரோல் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் ஆயுதங்களுடன் சுற்றி கும்பல் அங்கு இருந்து தப்பி ஓடி விட்டனர். 

இந்த சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கவுண்டம்பாளையம் காந்தி நகரை சேர்ந்த சர்மா என்ற மனிபாரதி (31), வேலாண்டிபாளையம் ஜவகர் நகரை சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 27), மற்றும் மதுரை மேய்ககல் பாடி கிராமத்தைச் சேர்ந்த ஸ்டீபன் ஜெபனேசர் (வயது 23) என தெரியவந்தது. 

உடனே போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk