இல்லத்தரசிகள் கவலை!போர் பதற்றம், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி முக்கியக் காரணங்கள்: ஒரு கிலோ வெள்ளி ₹2 லட்சத்து 9 ஆயிரத்திற்கு தடாலடி உயர்வு!
| நகையின் வகை | மாற்றம் | ஒரு சவரன் (8 கிராம்) | ஒரு கிராம் |
| 22 கேரட் ஆபரணத் தங்கம் | ↑ ரூ.160 (சவரனுக்கு) | ரூ.96,400 | ரூ.12,050 |
| 24 கேரட் சுத்தத் தங்கம் | ↑ ரூ.176 (சவரனுக்கு) | ரூ.1,05,168 | ரூ.13,146 |
ஒரு லட்சத்தைத் தொடுவதற்குச் சற்று இறங்கியிருந்த தங்கம் விலை, தற்போது ரூ.97 ஆயிரத்திற்குக் கீழே மீண்டும் இறங்கியிருப்பது இல்லத்தரசிகளுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.வெள்ளி விலையும் உயர்வு:தங்கம் விலை அதிகரித்த அதேவேளையில், வெள்ளியின் விலையும் தடாலடியாக உயர்ந்துள்ளது.ஒரு கிராமுக்கு ரூ.2 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.29 க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிலோவிற்கு ரூ.2,000 அதிகரித்து, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 09 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கம் விலை உயர்வுக்குக் காரணம் என்ன?உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலை, மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் வர்த்தகப் போரால் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால், பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதால், தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளதால், ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கித் தங்கம் விலை சென்று கொண்டிருக்கிறது.
