ஆழ்கடல் ஆய்வுத் திறன் கொண்ட உலக நாடுகளின் பட்டியலில் இணையும் இந்தியா; 2027-இல் 6000 மீட்டர் ஆழத்திற்கு மனிதர்களைக் கொண்டு செல்ல இலக்கு நிர்ணயம்!
இந்தியா ஆழ்கடல் ஆய்வுத் துறையில் புதிய சகாப்தத்தைத் தொடங்க தயாராகிவிட்டது. உள்நாட்டிலேயே முழுமையாக உருவாக்கப்பட்ட முதல் ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பலான 'மத்ஸ்யா 6000' (Matsya 6000)-ஐ மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் இன்று பெருமையுடன் அறிமுகப்படுத்தினார். இது, கடலடி வளங்களை ஆய்வு செய்யும் இந்தியாவின் அபரிமிதமான திறனைக் காட்டுகிறது.
முதற்கட்டமாக 500 மீட்டர் ஆழத்திற்கு மனிதர்களைக் கொண்டு சென்று ஆய்வுப் பணியைத் தொடங்குதல்.
சாதனைப் படைக்கும் விதமாக, 6000 மீட்டர் ஆழத்திற்குக் கீழ் மனிதர்களைக் கொண்டு செல்ல இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆழ்கடல் தொழில்நுட்பத்தின் மூலம், ஆழ்கடல் ஆய்வுத் திறன் கொண்ட உலகின் சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் பெருமையுடன் இணையும் என்று மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். பூமியின் மேற்பரப்பில் உள்ளதைவிடவும் அதிகமான வளங்கள் கடலடியில் குவிந்துள்ள நிலையில், 'மத்ஸ்யா 6000' மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய பெரும்புதையல் கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
