2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம்; பிப்ரவரி 17-ல் இறுதிப் பட்டியல் வெளியாகும் என அறிவிப்பு!
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்ட ‘சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள்’ (SIR) நிறைவடைந்த நிலையில், இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் (Draft Electoral Roll) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு கொண்ட வாக்காளர்கள் எனப் பல லட்சம் பேர் இந்தப் பட்டியலிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்தப் பட்டியலை வெளியிட்டனர்.
மதுரை
10 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்களின் பட்டியலை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன் குமார் வெளியிட்டார்.
மொத்தம் வாக்காளர்கள் எண்ணிக்கை 27,40,631
ஆண்கள் 11,58,601
பெண்கள் 12,01,319
மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 237
கோவை
கோவை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்பு கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகரியுமான பவன்குமார் இன்று வெளியிட்டார்.
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 32,25,198
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 25,74,608
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 6,50,590
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இன்று அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 11,26,924
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,74,274
திண்டுக்கல்:
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 19,34,447
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 16,09,533
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 3,24,914
தஞ்சாவூர்:
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 20,98,561
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 18,92,058
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,06,593
நெல்லை:
திருநெல்வேலி மாவட்டத்தின் 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 14,18,325 வாக்காளர்கள் உள்ளனர்.
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 14,20,334
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 12,03,368
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,16,966
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் புதிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பாவியா தண்ணீரூ அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
SIR பணிக்கு முன் வாக்காளர் விபரம் :
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் : 5,89,167
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள்- 533076.
SIR நிறைவடைந்த பின் நீக்கப்பட்ட மொத்த வாக்காளர் எண்ணிக்கை : 56091
விழுப்புரம்:
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 17,27,490
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 15,44,625
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,82,865
அரியலூர்:
அரியலூரில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ரத்தினசாமி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 5,30,890
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 5,06,522
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 24,368
தருமபுரி:
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 12,85,432
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 12,03,917
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 81,515
கடலூர்:
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 21,93,577
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 19,46,759
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,46,818
கிருஷ்ணகிரி:
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 16,80,626
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 15,06,077
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,74,549
திருப்பூர்:
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 24,44,929
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 18,81,144
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 5,63,785
திருவண்ணாமலை:
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 21,21,902
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 18,70,744
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 2,51,162
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா வெளியிட்டார்.
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 10,57,700
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 9,12,543
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 1,45,157
கள்ளக்குறிச்சி:
எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன் இருந்த மொத்த வாக்காளர்கள் - 11,60,607
எஸ்.ஐ.ஆர். பணிக்கு பின் உள்ள வாக்காளர்கள் - 10,76,278
நீக்கப்பட்ட வாக்காளர்கள் - 84,329
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் நிறைவடைந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டார்.
மொத்த வாக்காளர் 21,21,909 வாக்காளர்கள்
நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 2,52,162
தற்போது மொத்தம் வாக்காளர்கள் 18,69,740
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தின் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கந்தசாமி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
மொத்த வாக்காளர்கள் - 16,71,760
ஆண் வாக்காளர்கள் 8,06,914
பெண் வாக்காளர்கள் 8,64,682,
மூன்றாம் பாலினத்தவர்கள் 164
கரூர்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் தங்கவேல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
ஆண் வாக்காளர்கள் - 3,94,044பெண் வாக்காளர்கள் 4,24,546
மூன்றாம் பாலினத்தவர்கள் -82
மொத்தம் வாக்காளர்கள் - 8,18,672
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு முன்னர் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளும் இருந்த வாக்காளர் எண்ணிக்கை ஆண் வாக்காளர்கள் 4,30,518 பேரும் பெண் வாக்காளர்கள் 4,67,753 பேரும் இதர்ர் 91 பேர் என மொத்தம் 8,98,362 பேர் இருந்தனர். இவர்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் 79,690 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி
இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 வரைவு வாக்காளர் பட்டியலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சரவணன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெளியிட்டார்.
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை = 2368967
நீக்கப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை = 331787
தற்போது உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை = 2037180
புதிய சேர்க்கை மற்றும் திருத்தங்களுக்கான கால அவகாசம்
இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவுப் பட்டியலில் விடுபட்டவர்கள் அல்லது புதிய வாக்காளர்கள் தங்களைப் பதிவு செய்யத் தேர்தல் ஆணையம் புதிய கால அவகாசத்தை அறிவித்துள்ளது:
விண்ணப்பிக்கக் காலம்: டிசம்பர் 19, 2025 முதல் ஜனவரி 18, 2026 வரை.
தேவையான படிவங்கள்:
படிவம் 6: புதிய பெயர் சேர்க்கை (New Inclusion).
படிவம் 7: பெயர் நீக்கம் (Deletion).
படிவம் 8: முகவரி மாற்றம், பிழை திருத்தம் மற்றும் புதிய அடையாள அட்டை பெறுதல்.
இறுதிப் பட்டியல் வெளியீடு:
பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, பிப்ரவரி 17, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ‘வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தும் பணி’ (SIR) அரசியல் கட்சிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று வெளியாகியுள்ள இந்த வரைவுப் பட்டியல் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது.
