மும்பை மலாட் பகுதியில் நடந்த கொடூரம்; பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை: உத்தரப் பிரதேசத்தில் தலைமறைவான சந்திரபாலை போலீசார் சரசரவென வளைத்துப் பிடித்தனர்!
மும்பையின் மலாட் பகுதியில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதியன்று சாலையோரம் பேச்சு மூச்சின்றி கிடந்த பெண் ஒருவர், கழுத்து நெரிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், இந்தக் கொலையைச் செய்த ஆட்டோ ஓட்டுநரை உத்தரப் பிரதேசத்தில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் பாலியல் தொழிலாளி என்பதும், அவருக்கும் ஆட்டோ ஓட்டுநர் சந்திரபால் ராம்கிலாடி என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஏற்பட்ட கோபத்தில் சந்திரபால், அப்பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது.
இந்தக் கொலையைச் செய்தபின், உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் சந்திரபால் தலைமறைவாகப் பதுங்கி இருந்ததை மும்பை போலீசார் கண்காணித்தனர். குற்றவாளியைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
.png)