பெரம்பலூரில் விஜய் பிரசாரத்திற்காக மாவட்ட எஸ்.பி-யை நேரில் சந்தித்தது புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி தொடங்க உள்ள தனது "வெற்றிப் பயணம்" பிரசாரத்திற்காகப் பெரம்பலூரில் அனுமதி கோரப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி.ஆனந்த், பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. ஆதர்ஷ் பசேராவை சந்தித்து பிரசாரத்திற்கான அனுமதி கடிதத்தை வழங்கினார்.
விஜய் தனது முதல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்கி, அங்கிருந்து அரியலூர், குன்னம் மற்றும் பெரம்பலூரில் உரையாற்ற உள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்றத் தொகுதிகளான பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இடங்களில் விஜய் பிரசாரம் செய்ய இருக்கிறார்.
குன்னம்: குன்னம் பேருந்து நிலையம்
பெரம்பலூர்: காமராஜர் வளைவு அல்லது வானொலி திடலிலும் பிரசாரம் மேற்கொள்ள இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பிரசாரம் நடத்தப்படும் எனப் புஸ்ஸி.ஆனந்த் உறுதியளித்துள்ளார். பிரசார இடங்களை அவர் ஆய்வு செய்தபின், அனுமதி கோரி மனு அளித்துள்ளார். அப்போது, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.