ராணிப்பேட்டை மாவட்ட காவலர் தினத்தை முன்னிட்டு, காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு, காவல் பணியில் உயிர் நீத்த வீரர்களின் உயர்ந்த தியாகத்தை நினைவுகூறும் வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் அவர்கள், ராணிப்பேட்டை போக்குவரத்து காவல் நிலையத்தில் அமைந்துள்ள நினைவுத்தூணுக்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த மரியாதை நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், காவல் வீரர்களின் தியாகங்களைப் புகழ்ந்து பேசியதோடு, அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து காவலர் தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்தச் செயல், காவல் துறையின் ஒருமைப்பாட்டையும், தேசத்தின் பாதுகாப்புக்காக உயிர்த்தியாகம் செய்தவர்களுக்குக் காவல்துறையினர் அளிக்கும் மரியாதையையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
in
தமிழகம்