மலேசியாவின் சமையலறை புரட்சி! - மலிவான விலையில் தரமான எண்ணெய்: புதிய நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
கிரேட் குளோபல் சினெர்ஜி நிறுவனம் அதிரடி; குறைந்த வருமானம் கொண்டோருக்கும் உயர்தர எண்ணெய் உறுதி!
மலேசியா: மலிவான விலையில் தரமான பொருட்களை வழங்குவது சாத்தியமே என நிரூபிக்கும் வகையில், மலேசியாவின் சமையலறைகளில் ஒரு புதிய புரட்சி தொடங்கியுள்ளது. 'கிரேட் குளோபல் சினெர்ஜி எஸ்.டி.என். பி.எச்.டி.' என்ற நிறுவனம், மக்களின் நலன் கருதி மலிவான விலையில் உயர்தர சமையல் எண்ணெயை அறிமுகம் செய்துள்ளது.
ஒரு சகோதரத்துவக் கூட்டாண்மையாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், குறைந்த வருமானம் கொண்டோர், கிராமப்புற மக்கள் மற்றும் ஏழைகள் என அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையில், உயர்தர சமையல் எண்ணெயை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மலேசிய அரசாங்கத்துடன் இணைந்து மானிய விலையில் எண்ணெயைக் கொண்டு சேர்ப்பதில் தாங்கள் பெருமை கொள்வதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முயற்சி புதிய தொழில்முனைவோருக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
நிறுவனத்தின் கூற்றுப்படி, அவர்களின் தயாரிப்புகள் பன்முகத்தன்மை, ஆரோக்கிய நன்மைகள், உயர்தரம், மற்றும் தூய்மை ஆகிய அம்சங்களைக் கொண்டிருப்பதோடு, உணவின் சுவையையும் மேம்படுத்துகின்றன. 2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த நிறுவனம், தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கும் தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யத் தயாராகி வருவதாகவும் அறிவித்துள்ளது.
in
Life Style