போக்குவரத்துக்கு இடையூறு என முடிவெடுத்த நிர்வாகம்; ரூ. 33 லட்சம் செலவில் புதிய வளைவு கட்டப்படும்!
இந்த அலங்கார நுழைவாயில், செங்கோட்டை கேரளா மாநிலத்துடன் இருந்தபோது கட்டப்பட்டது. இது நீண்ட காலமாக இந்த நகரின் அடையாளமாக இருந்து வந்தது. தற்போது, வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், இந்த வளைவு இடையூறாக இருப்பதாக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால், இதை இடித்துவிட்டு, அதே இடத்தில் ரூ.33 லட்சம் செலவில் புதிய மற்றும் விசாலமான அலங்கார வளைவு கட்டப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழமையான நினைவுச் சின்னம் இடிக்கப்படுவது ஒருபுறம் வேதனையை ஏற்படுத்தினாலும், மறுபுறம் நவீனத் தேவைகளுக்காகப் புதிய கட்டுமானம் உருவாக இருப்பது வரவேற்கத்தக்கது எனப் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.