மீனாட்சியம்மன் கோவில் சொத்து ஆவண பதிவேட்டை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் எழுப்பிய கேள்வி:
"கோவிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்புகள் குறித்து மனுதாரர் குறிப்பிட்டுச் சொன்னால்தான் தெரியுமா?"
"கோவில் சொத்துக்கள் குறித்த ஆவணப் பதிவேட்டைத் தாக்கல் செய்ய வேண்டும்."
"கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்."
மனுதாரர் எந்தெந்த இடத்தில் ஆக்கிரமிப்புகள் உள்ளன எனக் குறிப்பிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்தது. இந்த வழக்கு குறித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. மேலும், கோவில் மற்றும் அதன் துணை கோவில்களின் சொத்துக்கள் குறித்த அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
