ஷாக்கடிக்குது மின் கட்டண பில்! - ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் என பில் அனுப்பிய மின்வாரியம்: பொதுமக்கள் அதிர்ச்சி!
திருநெல்வேலி மாவட்டம் மருதகுளத்தில் பெரும் குளறுபடி; அவுட் சோர்சிங் ஊழியர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபரீதம்!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது வீட்டுக்கு, ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் என அதிர்ச்சி தரும் வகையில் மின் கட்டண பில் அனுப்பப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் இந்த கோர குளறுபடி, அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், மின் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக அவுட் சோர்சிங் முறையில் நடந்த மின் கட்டண கணக்கெடுப்பில் குளறுபடி நடந்துள்ளதாகத் தெரிவித்தனர். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்திற்கு ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் மின் கட்டண பில் வந்திருப்பது, மின்வாரியத்தின் புதிய கணக்கெடுப்பு முறை மற்றும் அதன் நம்பகத்தன்மை குறித்துக் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. மின் கட்டண கணக்கெடுப்பு பணியில் உள்ள அலட்சியத்தைக் கண்டித்து பொதுமக்கள் ஆவேசம் அடைந்துள்ளனர்.
