இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி; கடற்படைக்கான ஜிசாட்-7 செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும்!
திருப்பதி பிரம்மோற்சவ விழாவின்போது பக்தர்கள் வருகை மற்றும் திருப்பதியைச் சுற்றியுள்ள காடுகளில் உள்ள வனவிலங்குகளைச் செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணிக்க இருப்பதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
ஆவடி அருகே உள்ள ஒரு தனியார் தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியக் கடற்படைக்காக அடுத்த மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள புதிய தகவல் தொடர்புச் செயற்கைக்கோளான ‘ஜிசாட்-7’, கடல் சார்ந்து மட்டுமின்றிப் புவியையும் கண்காணிக்கும் வகையில் அமையும் என்று தெரிவித்தார்.
அதன்படி, இந்தச் செயற்கைக்கோள் மூலம் பக்தர்களின் வருகையைக் கண்காணித்து, கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கவும் முடியும் என அவர் கூறினார். இந்த நடவடிக்கை, திருப்பதிக் கோயில் நிர்வாகத்திற்கும், வனத்துறைக்கும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.h
in
ஆன்மீகம்