இ-மெயில் மூலம் மிரட்டல்; மோப்ப நாய் உதவியுடன் சோதனை!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதன்மை கணக்காளர் ஜெனரல் அலுவலகத்திற்கு (AGS) வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது ஒரு புரளி எனத் தெரியவந்த நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதன்மை கணக்காளர் ஜெனரல் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, உடனடியாகத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் உதவியுடனும் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதனால், இது ஒரு புரளி என உறுதியானதை அடுத்து, போலீசார் நிம்மதியடைந்தனர். இருப்பினும், மிரட்டல் விடுத்த நபர் குறித்துத் தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.