ராம்கி நிறுவன வாகனம் கவிழ்ந்து விபத்து: 19 துப்புரவு பணியாளர்கள் காயம்! Ramky company vehicle overturns: 19 sanitary workers injured

மாதவரத்தில் இருந்து வந்த வாகனம் பெரம்பூரில் விபத்து; ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை!

சர்ச்சைக்குரிய ராம்கி நிறுவனத்தின் ஒப்பந்தத்தின் கீழ் பணிபுரிந்து வந்த தூய்மைப் பணியாளர்கள் வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 19 பணியாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை, மாதவரத்தில் இருந்து துப்புரவுப் பணியாளர்களை ஏற்றி வந்த வாகனம், பெரம்பூர் முரசொலி மாறன் பாலத்தின் அருகே திரும்பும்போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில், ஓட்டுநர் உட்பட 18 ஆண்கள் மற்றும் 1 பெண் என மொத்தம் 19 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மீட்கப்பட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்துப் புளியந்தோப்பு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!