"அணில் ஏன் 'அங்கிள் அங்கிள்' எனக் கத்துகிறது?" - விஜய் குறித்து சீமான் விமர்சனம்!
"தேர்தல் நெருங்குவதால் விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்!" - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்ததைக் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விமர்சன ரீதியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "அணில் 'ஜங்கிள் ஜங்கிள்' என்றுதான் கத்த வேண்டுமே தவிர, ஏன் 'அங்கிள் அங்கிள்' எனக் கத்துகிறது? அதேபோல, தேர்தல் நெருங்குவதால் விநாயகர் சதுர்த்திக்கு விஜய் வாழ்த்து சொல்லியிருக்கிறார்" என்று மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
தன் பேட்டியின்போது, விஜய்யின் இந்த நடவடிக்கை தேர்தல் அரசியலின் ஒரு பகுதி என்பதைச் சுட்டிக்காட்ட, அவர் இந்தப் பழமொழி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.