நீலகிரிக்கு ரெட் அலர்ட்: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
நீலகிரி மாவட்டத்தில் நாளை ஒருநாள் அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
மாணவர்களின் நலன் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு விடுத்துள்ள அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நாளை ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதேபோல, கனமழை மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நாளை ஒருநாள் மட்டும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் முழுமையாக மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில், பொதுமக்கள் உடனடியாக அவசரகாலக் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காகச் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 ஆகிய எண்களில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள், மாவட்டத்தில் மழை பாதிப்புகளுக்குத் தயாராக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
in
தமிழகம்