தேசிய விருது வழங்கும் தேர்வாளர்கள் குழுவுக்கு நடிகை ஊர்வசி கண்டனம்!
தேசிய விருதுகள் வழங்கும் முறை குறித்தும், தேசிய விருதுகள் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய நடிகை ஊர்வசி தேர்வாளர்கள் குழுவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகை ஊர்வசிக்கு உள்ளொழுக்கு படத்தில் நடித்த தனக்கு சிறந்த துணை நடிகை விருது அறிவிக்கப்பட்டது. மேலும், பூக்காலம் படத்திற்காக நடிகர் விஜயராகவனுக்கு சிறந்த துணை நடிகர் விருது வழங்கப்பட்டது. ஆனால், தங்கள் இருவருக்கும் ஏன் சிறந்த நடிகர்களுக்கான விருது பகிர்ந்தளிக்கவில்லை? கேள்வி நடிகை ஊர்வசி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாங்கள் பாடுபட்டு நடிக்கிறோம். வரி செலுத்துகிறோம். அரசு தருவதை தான் பெற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்வது சரியல்ல. அரசு வழங்கும் விருதை ஓய்வூதியமாகக் கருதி வாங்கி செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தேசிய விருதுகள் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன. திரைப்படக் கலைஞர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருது பெறுபவர்களைத் தேர்வு செய்ய, நடுவர் குழு அமைக்கப்படுகிறது. இந்த நடுவர் குழுவினர், ஒரு வருட காலத்திற்குள் வெளிவந்த அனைத்து இந்தியத் திரைப்படங்களையும் பார்த்து, அவற்றில் சிறந்த படங்களையும், கலைஞர்களையும் தேர்வு செய்வார்கள். இவர்களின் முடிவின் அடிப்படையில்தான் தேசிய விருதுகள் அறிவிக்கப்படும்.
பொதுவாக, தேசிய விருதுகளுக்கான நடுவர் குழுவில் திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள், திரைப்பட விமர்சகர்கள், திரைப்பட வரலாற்றாசிரியர்கள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம் பெறுவார்கள். நடுவர் குழுவின் தலைவரும், மற்ற உறுப்பினர்களும் இந்திய அரசால் நியமிக்கப்படுவார்கள். நடுவர் குழுவின் முடிவே இறுதியானது.
நடிகை ஊர்வசி எழுப்பிய கேள்விகள் மற்றும் கோரிக்கைகள்குறித்து விசாரிக்க, மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு நேரடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நடிகர்-நடிகைகளின் விருதுகள் பகிர்ந்தளிக்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் மற்றும் தேசிய விருதுகள் வழங்கும் முறைகள் குறித்து அமைச்சர் விளக்கம் அளிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.