சுதந்திர காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறுவோம்! - 79வது சுதந்திர தின வாழ்த்தில் காயல் அப்பாஸ்!
இந்திய மக்கள் அனைவரும் சுதந்திரத்தின் வரலாற்றை அறிவது அவசியம்; மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் நெகிழ்ச்சி!
சென்னை, ஆகஸ்ட் 15: 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சுதந்திரக் காற்றை சுவாசிக்கப் பாடுபட்ட தியாகிகளை நினைவு கூறுவோம் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் காயல் அப்பாஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி, நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில் அவர் கூறியதாவது: 1947, ஆகஸ்ட் 15ஆம் தேதி என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிலைத்து நிற்கும் ஒரு பொன்னான நாள். சுமார் இருநூறு ஆண்டுகளாக நமது நாட்டிலேயே அந்நிய தேசத்தவருக்கு அடிமைகளாக இருந்த நாம், இன்று சுதந்திரமாக நமது தாய் மண்ணில் சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். இதற்குக் காரணம் நமது விடுதலைக்காகத் தமது இன்னுயிரையும் தியாகம் செய்த தேசியத் தலைவர்களும், போராளிகளுமே.
சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு போராடிய மகான்களின் தியாகங்களை, இந்நாளில் நாம் பெருமையுடன் நினைவுகூறுவோம். தள்ளாடும் வயதைக் கடந்திருக்கும் தலைவர்களைப் பற்றி நமது இந்திய நாட்டின் புதிய தலைமுறை தெரிந்துகொள்வது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் கோலாகலமாகச் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லியில் பிரதமர் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவது, பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகள் நடைபெறுவது குறித்து அவர் தனது வாழ்த்துச் செய்தியில் விவரித்தார். இறுதியாக, 79வது சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடும் இந்திய மக்கள் அனைவருக்கும் மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.