பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு.. 66-வது இடத்தில் இந்தியா!
உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் அந்தோராவிற்கு முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், 2வது இடத்தில் ஐக்கிய அரபு அமீரகமும், 3வது இடத்தில் கத்தாரும் உள்ளன. இதில், 66 வது இடத்தில் இந்தியா இடம் பிடித்துள்ளது.
உலக நாடுகளில் பாதுகாப்பு நிலைமை மற்றும் குற்ற விகிதங்களை அடிப்படையாகக் கொண்டு, 2025ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஐரோப்பிய நாடான அந்தோரா முதலிடத்தை பிடித்துள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
பட்டியலில் இடம் பிடித்த முக்கியமான நாடுகள்
1-ம் இடம்– அந்தோரா
2-ம் இடம் – ஐக்கிய அரபு அமீரகம் (UAE)
3-ம் இடம் – கத்தார்
15-ம் இடம் – சீனா
66-ம் இடம் – இந்தியா
87-ம் இடம் – பிரிட்டன்
89-ம் இடம்– அமெரிக்கா
நாட்டின் குற்றவாளிகளின் எண்ணிக்கை பொது இடங்களில் பாதுகாப்பு நிலை, காவல் துறை மற்றும் அவசர உதவிச் சேவைகள் மக்களின் நம்பிக்கையும், பாதுகாப்பு உணர்வும் ஆகியவற்றும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவிற்கு 66வது இடம் கிடைத்திருப்பது, கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால், மற்ற முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாகத் தொடர வேண்டும் என்பதையும் இந்தத் தரவரிசை பட்டியல் உணர்த்துகிறது.
இந்தப் பட்டியலில் பிரபல நாடுகளான சீனா 15-வது இடத்தையும், பிரிட்டன் 87-வது இடத்தையும், அமெரிக்கா 89-வது இடத்தையும் பிடித்துள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகள் குறைந்த தரவரிசையில் இடம்பிடித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுற்றுலா, குடியேற்றம் மற்றும் முதலீடு உள்ளிட்ட துறைகளில் மக்கள் எடுக்கும் முடிவுகளைப் பெரிதும் பாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. குற்ற விகிதம், பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.