சாத்தூரில் பட்டாசு ஆலை வெடிவிபத்து - ஒருவர் பலி, நால்வர் காயம்!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழத்தாயில்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். பட்டாசு தயாரிப்புப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெடிவிபத்தைத் தொடர்ந்து 50 அடிக்கும் அதிகமான உயரத்திற்கு வெள்ளை நிற புகை மண்டலம் சூழ்ந்திருந்தது. தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தொழிலாளர்கள் யாராவது உள்ளே சிக்கியுள்ளனரா என தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை மாதத்தில் இது இரண்டாவது வெடிவிபத்து என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 1 ஆம் தேதி, சாத்தூர் தாலுகாவில் உள்ள சின்னக்காமன்பட்டி கிராமத்தில் கோகுலேஷ் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். இந்த தொடர் விபத்துக்கள் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.
in
தமிழகம்