தில்லையாடி அருணாச்சல கவிராயர் இயல் இசை நாடக மன்றத்தின் 27 ஆம் ஆண்டு முப்பெரும் விழா!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தில்லையாடியில் உள்ள கிராம பொது நல சங்க வேதியன் அரங்கத்தில் இந்த விழாவில், தமிழில் முதல் முறையாக இசை நாடக வடிவில் ராமநாடகம் என்ற நூலை எழுதிய தில்லையாடியைச் சார்ந்த அருணாச்சல கவிராயரை நினைவு கூறும் வகையில் அவரது பெயரில் அருணாச்சல கவிராயர் இயல் இசை நாடக மன்றம் உள்ளது இம்மன்றத்தின் 27 ஆம் ஆண்டு இசை விழா, சான்றோர் பெருமக்கள் ஐவருக்கு விருது வழங்கும் விழா, சாதனையாளர்களைப் பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராகப் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு விருது மற்றும் பொற்கிழிகள் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அருணாச்சல கவிதாயர் இயல் இசை நாடக மன்றத்தின் இந்த ஆண்டுத் தீர்மானம் வாசிக்கப்பட்டது அதில் மயிலாடுதுறை இருந்து தரங்கம்பாடி வரை ரயில் பாதையை மீண்டும் கொண்டுவர பாராளுமன்ற உறுப்பினரை வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது நிகழ்ச்சியில்
அருணாச்சல கவிராயர் இயல் இசை நாடக மன்ற நிறுவனர் வீராசாமி உள்ளிட்ட பாலர் கலந்து கொண்டனர்.