Cuddalore Train Accident: கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து.. 2 மாணவர்கள் உயிரிழப்பு..!
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே, ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது, தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் பள்ளி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், வேன் ஓட்டுநர் வேகமாக வேனை இயக்கி, ரயில்வே தண்டவாளத்திற்குள் நுழைந்ததே விபத்திற்கு காரணம் என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 மாணவர்கள் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே செம்மங்குப்பம் பகுதியில் ரயில் தண்டவாளம் சாலையின் நடுவே அமைந்துள்ளது. அந்த தண்டவாளத்தை கடந்து வாகனங்கள் மறுபுறம் செல்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், கடலூர் மயிலாடுதுறை பயணிகள் ரயில் காலை 7 மணியளவில் செம்மங்குப்பம் அருகே ரயில் வந்துள்ளது. அப்போது, அவ்வழியாக இன்று காலை பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி வேனின் ஓட்டுநர் தண்டவாளத்தில் ரயில் வருவதை கவனிக்காமல் வேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. அப்போது, வேகமாக வந்து கொண்டிருந்த ரயில் வேன் மீது பயங்கரமாக மோதியது. இதனால், வேன் ரயிலின் வேகத்தில் இடித்து தள்ளப்பட்டு அப்பளம்போல நொறுங்கி தண்டவாளத்தில் இருந்து பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. இதனால், பள்ளிக்குச் சென்ற குழந்தைகளுடன் சென்ற வேன் ரயில் மீது மோதியதில் 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
விபத்துக்கு வேன் ஓட்டுநர் தான் காரணம்
பள்ளி வேன் மீது, சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் மோதி விபத்துக்குள்ளானதில், 2 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், வேன் ஓட்டுநர் தான் விபத்துக்கு காரணம் என்றும், வேகமாக இக்கியதாகவும், ரயில்வே தண்டவாளத்திற்குள் நுழைந்ததாகவும் ரயில்வே தரப்பில் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகிவுள்ளது.
ரயில்வே நிர்வாகம் அறிக்கை
கேட் கீப்பர் கேட்டை மூடத் தொடங்கிய போது வேன் ஓட்டுநர் வேனை வேகமாக இக்கியதாகவும், ரயில்வே தண்டவாளத்திற்குள் நுழைந்ததாகவும் ரயில்வே தரப்பில் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஆளில்லாத ரயில்வே கேட் முறையாக மூடப்படாததால் ரயில்வே வேன் உள்ளே நுழைந்ததாக முதலில் மக்கள் குறிப்பிட்ட நிலையில் ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் இன்டர்லாக் செய்யப்படாத கேட் எனவும், கேட் கீப்பர் முறையாக மேனுவலாக கேட்டை மூட முயற்சித்ததாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த ரயில்வே கேட்கீப்பர் முறையாக கேட்டை மூடாமல் தூங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டிய நிலையில், கேட் கீப்பரின் கவனக் குறைவால் ரயில்வே கேட் மூடப்படாததே விபத்துக்குக் காரணம் என்பதால், அலட்சியமாக இருந்ததாக கேட் கீப்பரை பொதுமக்கள் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் இரங்கல்
கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிவாஸ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் - உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிவாரணம் அறிவிப்பு
இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும் - பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
கேட் கீப்பர் கைது
ரயில்வே கேட்டை கடந்தபோது பள்ளி வேன் விபத்தில் சிக்கிய விவகாரத்தில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பர் பங்கஜ் சர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், காவல்துறை அவரை கைது செய்தது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், யாரும் எதிர்பாரத வகையில் நடைபெற்ற இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாகவும், காயமடைந்த மாணவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#Schoolbusaccident : #Tamilnadu
— Surya Reddy (@jsuryareddy) July 8, 2025
A School Bus Crossing a Railway Track was Hit by a #Train at #Semmankuppam near #Cuddalore, 2 Children Dead and 4 injured (#TrainAccident).
Horrific, at least 2 #Students were killed and 3 others sustained serious injuries after a #SchoolBus… pic.twitter.com/pvi0NUejhO