தொண்டர்கள் எப்போதும் என் பக்கம் தான் - ராமதாஸ் உறுதி

தொண்டர்கள் எப்போதும் என் பக்கம் தான் - ராமதாஸ் உறுதி 

தொண்டர்கள் எப்போதும் என் பக்கம் தான், என் பக்கம் என சொல்வதை விட எனக்கு அவர்கள் தான் வழிகாட்டிகள் அவர்களின் நலனுக்காக நான் எதையும் செய்வேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது மகள் கவிதா இல்லத்திற்கு வருகை இந்த மகள் மற்றும் பேரனை சந்தித்த பின்னர் வீடு திரும்பும் போது பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர்.

கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களின் அன்பு தொல்லைக்கு நன்றி இருந்த போதும் உங்களுக்கு தேவையான செய்தியை என்னால் சொல்ல முடியவில்லை என்று தெரிவித்தார்.

எல்லாவற்றிற்கும் கண்டிப்பாக ஒரு தீர்வு இருக்கும் அந்த தீர்வு எங்களது கட்சிக்கும் சரியான தீர்வாக இருக்கும் என்று தெரிவித்த பின்னர் ஊடகங்கள் சற்று பொறுமையாக இருங்கள் அதுவரை உங்களிடம் இருந்து பிரியா விடைபெறுகிறேன் என இரு முறை தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு உடனான கூட்டணி நிலைப்பாட்டில் நான் இல்லை என கடைசி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தீர்கள் தற்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு அது குறித்து தற்போது தெரிவிக்க முடியாது என தெரிவித்தார். 

பாமக இடதுசாரி சிந்தனையுடன் வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி தற்போது வலதுசாரி சிந்தனைகள் அதிகரித்துள்ளது என திருமாவளவன் விமர்சனம் குறித்து எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு என்னிடம் பூதக்கண்ணாடி இல்லை என தெரிவித்தார்.

தொண்டர்கள் எப்போதும் உன் பக்கம் தான் என் பக்கம் என சொல்வதை விட எனக்கு வழிகாட்டிகள் அவர்களின் நலனுக்காக நான் எதையும் செய்வேன் என தெரிவித்தார். 

அதன் பின்னர் அவரது பேரன் ராமதாஸுக்கு think fast and slow என்கிற daniel kaheneman எழுதிய நூலை பரிசாக கொடுத்தார்.
Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?