கோவை: பாஜக இளைஞரணி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு; போலீஸார் விசாரணை | Kovai: BJP Youth Wing cadre brutally attacked

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பாஜக மண்டல இளைஞரணிச் செயலாளர் மர்ம நபர்களால் வெட்டப்பட்டார். படுகாயமடைந்த அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பாஜகவின் கோவை ஆர்.எஸ்.புரம் மண்டல இளைஞர் அணி செயலாளராக இருப்பவர் சதீஷ்குமார். இவர் நேற்று (ஆக.27) இரவில் பூ மார்க்கெட் பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த நபர்கள் திடீரென்று சதீஷ்குமாரை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டிவிட்டும் தப்பி ஓடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அந்தப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அத்துடன் பாஜ நிர்வாகியை கத்தியால் குத்தி மற்றும் அரிவாளால் வெட்டி தப்பி ஓடிய நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Travel with us!

News Editor's/Reporter's can join with our Desk Team. Publish your news now on 24×7. Reachout with your contact through editor@ipdtamil.com