"இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதில் சிக்கல்" - என்ன காரணம் தெரியுமா.?

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை  ரத்து செய்யக்கோரி எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து முதலில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

தற்போது செந்தில்பாலாஜியிடம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன. செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பார் என கடந்த 16-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அமைச்சராக ஒருவரை நியமிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரம். நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் அனுமதிக்காதது சரியானது என தெரிவித்துள்ளது. செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு விரோதமானது. எனவே, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்ற அரசாணையை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இதுதொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Kaspersky Premium

Champions don't take risks, why should you?