Family Planning : பெண்ணின் அனுமதியின்றி குடும்ப கட்டுப்பாடு செய்ததால் அதிர்ச்சி.!

மதுரை:

மேலூர் அருகே முகம்மதியாபுரத்தைச் சேர்ந்தவர் அப்சர் உசேன். இவருடைய மனைவி ஆஷிகா பானு. இவர் 2வது பிரசவத்துக்காக, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், டாக்டர்கள் ஆஷிகா பானுவிடம் அனுமதி கேட்காமலேயே அவருக்கு குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர்.

இது குறித்து மருத்துவமனை டீன்-யிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆசிபா பானுவின் கருக்குழாயில் நீர்க்கோர்த்து இருந்ததாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் மருத்துவர்கள் ஆலோசித்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாக மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Swiggy

When Hunger Calls, Swiggy Delivers!