மருமகளை துடிதுடிக்க கொன்ற கொடூரம்.!

திருநெல்வேலி:

திருநெல்வேலி இரண்டாவது திருமணத்துக்கு தடையாக இருந்த மருமகளை கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் இட்டேரியை சேர்ந்த தங்கராஜ் (50) என்பவரது மனைவி உயிரிழந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில், தங்கராஜ் தனது மகன் தமிழரசனுக்கு எழுதிக் கொடுத்த சொத்துக்களை திருப்பி கேட்டுள்ளார். இதனால், மகன் தமிழரசன் மற்றும் அவரது மனவியும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தங்கராஜ் தனது மருமகள் முத்துமாரியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தங்கராஜை கைது செய்துள்ளனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

"உங்களுடன் ஸ்டாலின்"

திட்ட முகாம்களில் கலந்து கொள்வீர்..! பயன்பெறுவீர்...!